ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 9-ந்திகதிக்கு ஒத்திவைப்பு

304 0

201609020819022818_Supreme-court-adjourned-jallikattu-against-case-final_SECVPFதமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கின் இறுதி விசாரணையை நவம்பர் 9-ந்திகதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. இதனால் 2015-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8-ந்தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில், மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் மற்றும் 9 தனி நபர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டு நடத்த ஜனவரி 14-ந்தேதி இடைக்கால தடை விதித்தது. அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று கடந்த ஜூலை மாத இறுதியில் மத்திய அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும், மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு சில மனுதாரர்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவின் நகல் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் அனைவருக்கும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, வழக்கின் இறுதி விசாரணையை வருகிற நவம்பர் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.