சட்டவிரோத கேபிள் டிவி வழங்குனர்களுக்கு எதிராக முறைப்பாடு!

254 0

யாழ்ப்பாணத்தில் அரச அனுமதி பெறாமல் கேபிள் டிவி இணைப்புகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச அனுமதி பெற்று கேபிள் டிவி இணைப்புகளை வழங்கும் ஏஎஸ்கே நிறுவனத்தால் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

அரச அனுமதி பெறாமல் கேபிள் டிவி இணைப்புகளை வழங்க கடந்த டிசெம்பர் 31ஆம் திகதியுடன் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் தடை விதிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக கேபிள் டிவி இணைப்புகளை வழங்கியவர்களின் வயர்கள் யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் அகற்றப்பட்டன.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பிலிருந்து வருகைதந்து அவற்றை அகற்றியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போதும் சட்டவிரோத கேபிள் இணைப்புகளை யாழ்ப்பாணத்திலுள்ள சில நிறுவனங்கள் முன்னெடுத்து வருவதாக குற்றஞ்சாட்டி ஏஎஸ்கே நிறுவனத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது.

டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியே ஏஎஸ்கே நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment