எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உறைபனி – 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று!

277 0
நாட்டின் பல பாகங்களில் குளிரான இரவுகளுடனும், விடியல்களுடனும் கூடிய வரண்ட காலநிலை நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த வரும் நாட்களில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் உறைபனியை அவதானிக்கலாம். ஏனைய பாகங்களில் பொதுவாக சீரான காலநிலை நிலவும்.

வடக்கு, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment