தேசிய சுகாதார தொலைக்காட்சியின் ஆரம்ப வைபவம் நாளை

240 0

தேசிய சுகாதார தொலைக்காட்சியின் ஆரம்ப வைபவம் நாளை கொழும்பில் இடம் பெறவுள்ளது.

பொது மக்களின் சுகாதார தரத்தை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் நோக்கிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தோற்றா நோய் குறித்து பொது மக்களுக்கு தெளிவுப்படுத்துதல், குடும்ப சுகாதாரம் தொடர்பில் விரிவான தெளிவை பெற்று கொடுத்தல், போஷாக்கு விளையாட்டு மற்றும் குடும்ப வீட்டு வாழ்க்கை குறித்து தெளிவுப்படுத்துதல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறவிருப்பதாக சுகாதார அமைச்சின் ஊடக பணிப்பாளர் பிரசன்ன அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த அங்குரார்ப்பண நிகழ்வு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்த தலைமையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment