மடுவில் இருபத்திரண்டு இலட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட அஞ்சல் நிலைய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மடுப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
மடு அஞ்சல் அலுவலகத்தில் பிரதான அஞ்சல் நிலைய அதிகாரியாக இருந்த நபர் சில வருடங்களாக இருபத்திரண்டு இலட்சம் வரை பணமோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த வருடம் பணமோசடியில் ஈடுபட்டதை மேல் அதிகாரிகள் கண்டு பிடித்தனர்
இது தொடர்பாக கடந்த வருடம் மார்கழி மாதம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளில் குறித்த நபர் மோசடியில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப் படவே கைது செய்ய முற்பட்ட போது தலைமறைவாகி இருந்த நிலையில் குறித்த அஞ்சல் நிலைய அதிகாரி கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதாக மடுப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.