பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதா?

697 0

uk-voteபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதா? அல்லது பிரிந்து செல்வதா? என்ற வாக்கெடுப்பு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பின் முன்னணி விபரங்கள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன.கடுமையான போட்டி நிலவும் இந்த வாக்கெடுப்பில் இதுவரை வெளியான முடிவுகளின் படி பிரிந்து செல்வதற்கே அதிளவானோர் வாக்களித்துள்ளனர்.

மொத்தம் 382 வாக்கெடுப்பு நிலையங்களில் எண்ணிய வாக்குகளின் அடிப்படையில் 51.5 வீதமானோர் பிரிந்து செல்வதற்கும் 48.5 வீதத்தினர் இணைந்திருப்பதற்கும் வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பில் வெல்வதற்கு 16.5 மில்லியன் வாக்குகளைப் பெறவேண்டும்.

இந்நிலையில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இன் அழைப்பிற்கிணங்க, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்கவேண்டுமென பிரச்சாரம் செய்வதற்கு நான்கு அதிகாரிகள் பிரித்தானியாவிற்குச் சென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment