வவுனியாவில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 31 முறைப்பாடுகள்

231 0

வவுனியா மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவி மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியுமான என்.கமலதாசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வவுனியா மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் பாரிய குற்றச்செயல்கள், முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை.

எனினும் சிறியளவிலான தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் இதுவரை 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதில் அதிகமாக சுவரொட்டிகள் காட்சியப்படுத்தியமை தொடர்பிலேயே கிடைக்கப்பெற்றுள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.” என  தெரிவித்தார்.

Leave a comment