விவசாய பிரிவுகளை நவீனமுறைப்படுத்த திட்டம்

263 0

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் விவசாய அமைச்சின் மூலம் இலங்கையின் விவசாய பிரிவுகளை நவீனமயப்படுத்துவதற்குரிய திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் மூலம் ஐந்து வருட காலப்பகுதிக்குள் ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியதாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் மூலம் சிறுபோக பயிற்செய்கையாளர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்தல், உள்நாட்டு விவசாய உற்பத்திகளை மேம்படுத்தல், சந்தைக்கு வரும் விவசாய உற்பத்தி பொருட்களின் தரங்களை மேம்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment