அ.தி.மு.க.வில் இருந்து திருச்சி, நாகப்பட்டினம் நிர்வாகிகள் 100 பேர் நீக்கம்

313 0

திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய இரு மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100 அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், (மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் விஜி மற்றும் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மோகன்தாஸ், ஜோதிவாணன், ஞானசேகரன், பாபு, உமா, லதா மற்றும் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த கேசவன், மகேஷ், முத்துக்கிருஷ்ணன், செல்வராஜ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் மலைக்கோட்டை, பாலக்கரை, தில்லைநகர், திருவெறும்பூர், உறையூர் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

உடன் பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல நாகப்பட்டினம் நகரச் செயலாளர் சந்திரமோகன், செம்மனார் கோவில் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெனார்த்தனம், வேளாங்கண்ணி பேரூராட்சிக் கழகச் செயலாளர் கிங்ஸ்லி ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் மணிமாறன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ஹாஜாஹமீன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜூலியட் அற்புதராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிப் பொருளாளர் லோகநாதன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணித் தலைவர் அய்யாவு உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர். 2 மாவட்டங்களிலும் சுமார் 100 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment