தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் சீருடை அடுத்த கல்வி ஆண்டு முதல் மாறஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் சீருடை அடுத்த கல்வி ஆண்டில் மாறுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மெருன் நிற கால் சட்டை- வெளிர் சந்தன நிற சட்டை. மாணவிகளுக்கு இதே நிறத்தில் ஸ்கர்ட்- சட்டை வழங்கப்படும்.
6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பச்சை நிற கால் சட்டையும், மாணவிகளுக்கு பச்சை நிற சுடிதாரும் வழங்கப்பட உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தலா 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப்படும். வருகிற மே மாதத்துக்குள் புதிய சீருடை உற்பத்தி முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.