அரச நிறுவனங்களினதும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களினதும் பாதுகாப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
இதனை கருத்திற் கொண்டு அரச நிறுவன இணையத்தளங்களை தகவல் மற்றும் தொழில்நுட்ப மத்திய நிலையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளோம்.
அத்துடன் சைபர் தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
அதுமாத்திரமின்றி முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களில் சேரு பூசும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் சட்டத்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் தெரிவித்தார்.