சைட்டம் தனியார் வைத்திய கல்லூரியை நிலைநிறுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை சைட்டம் தொடர்ச்சியாக நடத்தி வருவதாகவும் கூறி, எதிர்வரும் 25ஆம் திகதி மருத்துவ பீட மணவர் சங்கம் நாடுதழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து, மேற்படி சங்கத்தின் அமைப்பாளர் ரயன் ஜெயலத் தெரிவித்ததாவது:
‘‘நவம்பர் 8ஆம் திகதி சைட்டம் கல்லூரியை முடக்குவதாக அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால் இது வரையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சைட்டம் கல்லூரியை அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டமும் தோல்வியடைந்துள்ளது.
“தடை செய்வதாகக் கூறப்பட்ட கல்லூரி இன்று மீண்டும் பழையபடி இயங்க ஆரம்பித்துள்ளது. இதை எதிர்த்தே 25ஆம் திகதி மீண்டும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.