சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் தலைவர் டப்ளியூ. பி. கணேகலவை தடுத்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை அகற்றுவதற்கு பொலிஸார் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக இன்று காலை 09.00 மணி முதல் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் கூறியிருந்தார்.