உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறினார்.
இது தொடர்பில் அனைத்து தபால் ஊழியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதட 03ம் திகதி வரையில் இடம்பெற உள்ளது.
அத்துடன் எதிர்வரும் 28ம் திகதி விஷேட விநியோகிக்கும் நாளாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறினார்.
அடுத்த மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஒரு கோடி 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.