துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்தவர் உயிரிழப்பு

188 0

செவணகல, கட்டுபிலகம பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிதாரி யார் என்பது தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடவளவ, வலவேகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகள் இன்று (18) இடம்பெற உள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் செவணகல பெலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment