ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையிலான தேர்தல் கூட்டு உடன்படிக்கையின்படி ஐ. தே. கட்சியினால் இரு தேசிய பட்டியல் பாராளுமன்ற இடங்கள் ஶ்ரீ ல. மு. காங்கிரஸுக்கு வழங்கப்பட்டிருந்தன.
அதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார் எம்.எச்.எம்.சல்மான்.