இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து அலுவலக நடவடிக்கைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரணில் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி போக்குவரத்து சபையின் பிரதான மற்றும் பிரதேச அலுவலகங்களில் கடமை புரியும் 1700 ஊழியர்களுக்கு தொழில் பயிற்சி அதிகார சபையின் மூலம் கணனி நடவடிக்கை தொடர்பான 6 மாத கால பயிற்சி நெறி வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 1700 ஊழியர்களுக்கு இவ்வருடத்திற்குள் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அலுவலக நடவடிக்கைகளை கணனி மயப்படுத்துவதன் மூலம் பிரயாணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரணில் சிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.