பாலியல் இலஞ்சம் கோரிய வியாபாரி கைது

201 0

கொழும்பு பிரதேசத்தில் திருத்தம் ஒன்றை மேற்கொள்ள தனது கணணியை ஒப்படைத்த மாணவி ஒருவரின் புகைப்படங்களை அக்கணணியிலிருந்து பெற்று அதனை இணையத்தளத்தில் பதிவேற்றுவதாக அச்சுறுத்தி குறித்த மாணவியிடம் பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்த கணனி, தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜகிரிய கொஸ்வத்த பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்ட வேளையில் அவரிடமிருந்த கணனி தரவு செயலாக்க அலகு மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment