நுகேகொட, நாவல வீதி திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்னாலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பகத்தின் பம்பிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலைய பம்பிகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக பவுசர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கியமை தெரியவந்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து விசாரணை முடிவடையும் வரை பம்பிகளுக்கு சீல் வைப்பதென அதிகாரிகள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.