கஜகஸ்தான்: பஸ் தீபிடித்த விபத்தில் 52 பேர் பலி

244 0

மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள கஜகஸ்தான் நாட்டில் இன்று திடீரென ஓடும் பஸ்சில் தீபிடித்த விபத்தில் 52 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள கஜகஸ்தான் நாட்டில் உள்ள அக்டோபே மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக இன்று திடீரென ஓடும் பஸ்சில் தீபிடித்த விபத்தில் 52 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
ககஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் இரு டிரைவர்கள் உள்பட 57 பேருடன் சென்று கொண்டிருந்த அந்த பஸ்சில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 10.30 மணியளவில் திடீரென்று தீபிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 52 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயமடைந்த 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கஜகஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a comment