இலங்கையின் மாற்றத்தை பான் கீ மூன் சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறுவார்

330 0

FB_IMG_1451586271262யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு வருகை தந்த போது காணப்பட்ட சூழலையும் தற்போதுள்ள நிலைமையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் நன்றாகவே இனங்கண்டு கொள்வார்.

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றத்தை கண்டு மகிழ்ச்சி காணும் அதேவேளை அந்த தகவலை சர்வதேசத்திற்கு எடுத்து செல்வார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் மீது அவர் பூரன நம்பிக்கை கொள்வார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே  அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தற்போது இலங்கைக்கு சர்வதேச தலைவர்களின் வருகை தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமுள்ளன. இது இலங்கைக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

யுத்தம் நிறைவடைந்த கையோடு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு வந்தார். இதன்போது மிகவும் மோசமான நிலைமை காணப்பட்டது.

ஆனால் இரண்டாவது தடவையாக வந்துள்ள பான் கீ மூன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைவார்.

அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் நல்லிணக்கம் தொடர்பான விடயத்தில் பாரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அதனை பான் கீ மூன் இனங்கண்டு கொள்வார்.

அதுமாத்திரமின்றி நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொள்வார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தான தகவல்களை சர்வதேசத்திற்கு எடுத்து செல்வார். இது இலங்கைக்கு கிடைத்த பெரும் வெற்றியாக அமையும் என தெரிவித்தார்.