நாடு முழுவதும் 4 மணி நேர சுற்றிவளைப்பு, பலர் கைது

240 0

நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் கட்டுப்பாட்டு பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட 4 மணி நேர திடீர் சுற்றிவளைப்புக்களின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 802 பேர் உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் வழிகாட்டலுக்கு ஏற்பட நேற்று முன்தினம் (16) இரவு 10.00 மணி முதல் நேற்று (17) அதிகாலை 2.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment