தீ சுடுமென்று அன்றே சொன்னோம் – தொண்டமான்

266 0

“மாற்றம் வேண்டும் என்று எண்ணி செய்த தவறு தான் இன்று பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வைத்துள்ளது. அன்று செய்த தவறை இனி செய்யாமல் சிந்திக்க வேண்டும். மீண்டும் அந்த தவறை செய்தால் 5 வருடத்திற்கு தலைத்தூக்க முடியாது” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி தெரிவித்தார்.

மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் புளூம்பீல்ட் பிரிவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “75 வருட காலமாக இலங்கை தொழிலாளர் காங்கிராஸ் மக்களுக்கு தேவையானவற்றை தேவையான நேரத்தில் செய்துக் கொடுத்தது. நெருப்பு சுடும் என்று இ.தொ.கா கூறியும், சுட்டாலும் பரவாயில்லை என்று நெருப்பை தொட்டு இன்று பல பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

நான் அமைச்சராக இருந்த நேரத்தில் உரிய முறையில் வீடுகளை அமைத்து கொடுத்தேன். ஆனால் தற்போது முறையற்ற ரீதியில் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நமது முன்னோர்கள் உருவாக்கிய தேயிலை மலைகளை நமக்கு பிரித்து கொடுத்தால் என்ன? எம்மால் பராமரிக்க முடியும். தேயிலை காணிகள் பிரிக்கப்படுகின்றன. நமது மரக்கறி தோட்டங்கள் தோட்ட அதிகாரிகளால் அபகரிக்கப்படுகின்றன. இதனை மாற்றியமைக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment