இதுவரையில் இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 20 கப்பல்கள் வரை மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கலாச்சார நிதியத்தினால் நடத்தப்பட்ட புலனாய்வின் படி இந்த தகவல் தெரியவந்ததாக கல்வியமைச்சு கூறியுள்ளது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த புலனாய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
100 ஆண்டுகளை விட பழமையானது எனக் கருதப்படும் கப்பல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் பெரும்பாலானவை 25 மீற்றரை விட ஆழமான பகுதியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கப்பல்களில் சரக்குக் கப்பல்கள், நீராவிக் கப்பல் மற்றும் இயந்திரம் மூலம் இயங்கக் கூடிய படகுகளும் அடங்குவதாக மத்திய கலாச்சார நிதியம் கூறியுள்ளது.
இந்த கப்பல் தொடர்பான புலனாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட மதிப்புமிக்க தொல்பொருட்கள், காலி கோட்டையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.