இடைக்கால அறிக்கையின் மாயைகளைக் கட்டுடைத்தல்! – குமாரவடிவேல் குருபரன்

505 0

அரசியல் விவாதங்களை தடுப்பது ஜனநாயக விரோதம் என்பதுடன் அரசியல் பேசாதீர்கள் என ஜனநாயக கட்டமைப்பில் எங்கேயும் கூறப்படவில்லை. என கூறியிருக்கும் யாழ்.பல்கலைக்கழக சட்டத் துறை விரிவுரையாளரும் சட்டத்துறை தலைவருமான குமார வடிவேல் குருபரன், தமிழ் மக்கள் பேரவை யின் இந்த கலந்துரையாடலை நிறுத்துமாறு தேர்தல் திணைக்களத்திடம் கேட்டவர்கள் யார்? என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக அறிந்து. அவர்களை சந்தித்து தமிழர்களின் அரசியலலை குறு கிய வட்டத்திற்குள் கொண்டுவராதீர்கள் என கூறுவேன் எனவும், இதை விட மோசமாக நடக்குமா? என எண்ணும் அளவுக்கு நீதி துறை மற்றும் தேர்தல் திணைக்களத்தின் செயற்பாடுகள் அமைவதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஒழுங்கமைப்பில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த கலந்துரையாடல் தேர்தல் திணைக்களத்திற்கு கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த கலந்துரையாடல் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அதற்கும் புகாரி கொடுக்கப்பட்டு அதனையும் நிறுத்துமாறு தேர்தல் திணைக்களம் கூட்டுறவு திணைக்க ளத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. எனினும் கலந்துரையாடல் திட்டமிட்டபடி வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும்போதே குமாரவடிவேல் குருபரன் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில். இதனை விடவும் மோசமாக நடக் குமா? என கேட்கும் அளவுக்கு நீதி துறை மற்றும் தேர்தல் திணைக்களம் ஆகியவற்றின் சில நடவடிக் கைள் உள்ளன. தமிழ் மக்கள் பேரவை இந்த கலந்துரையாடலை யாழ்.பல்கலைக்கழகத்தில் ஒழுங்கமைத்தபோது நிறுத்துமாறு தேர்தல் திணைக்களம் கடிதம் எழுதியது. பின்னர் வீரசிங்கம் மண்டபத்திற்கு மாற்றப்பட்டபோது அதனையும் நிறுத்தும்படி தேர்தல் திணைக்களம் கூட்டுறவு திணைக்களத்திற்கு கடி தம் எழுதியது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் விடயம் இந்த கலந்துரையாடலில் அரசியலமைப்பு பற்றி பேசப்படுவதால் ஒரு தரப்புக்கு சாதகமாகவும், மற்ற தரப்புக்கு பாதகமாகவும் அமையலாம் என கூறப்பட்டுள்ளது. அரசியல் பேச கூடாது ஜனநாய கட்டமைப்பில் எங்கும் சொல்லப்படவில்லை.

மேலும் அர சியல் விவாதத்தை நடத்துவது ஜனநாயக விரோதமான செயற்பாடுமாகும். சிலர் மக்களை ஏமாற்றி ஒற் றை பரிமாணத்தில் செய்திகளை ஊகங்கள் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என நினைக்கிறார்க ள். அமெரிக்க ஜனாதிபதி சில ஊடகங்களை பேக் நியூஸ் என கூறுகிறார். அதேபோல் இங்கேயும் சிலர்பேக் நியூஸ் என கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படுவதும், எங்களை போன்றவர்கள் மக்கள் மத்தியில் அரசியல் பற்றி பேசுவதும் ஜனநாயகத்தின் அடிநாதம். எனவே இந்த புகார்களை வழங்கியவர் யார்? என்பதை தகவலறியும் உரிமை சட்டத்தின் ஊடாக அறிந்து தமிழர் அரசிய லை குறுக்காதீர்கள், குறுகிய வட்டத்திற்குள் கொண்டுவராதீர்கள் என கூறுவேன் என கூறினார்.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் ஏக்கிய இராஜ்ய என எழுதப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கியதேசிய கட்சியும் காரணமாக இருக்கலாம். என சந்தேகம் வெளியிட்டிரு க்கும் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளரும், சட்டத்துறை தலைவருமான குமாரவடிவே ல் குருபரன் மற்றய கட்சிகள் ஏக்கிய இராஜ்ய- ஒருமித்த நாடு என்பதை எதிர்கின்றன எனவும் கூறினார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஒழுங்கமைப்பில் இடைக்கால அறிக்கை- மாயைகளை கட்டுடைத்தல் என்னும் தலைப்பில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் மற்றும் கலத்தாய்வை நேற்று நடத்தியிருந்தது. இதில் “இடைக்கால அறிக்கை- மாயைகளை கட்டுடைத்தல்” என்னும் தலைப்பில் உ ரையாற்றும்போதே குருபரன் மேற்கண்டவாறு சந்தேகம் வெளியிட்டிருந்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இடைக்கால அறிக்கை ஒற்றையாட்சிக்கான குணாம்சங்களையே கொண்டிருக்கின்றது. காரணம் ஒற்றையாட்சிக்கான பிரதான குணாம்சமான இறமை பகிரப்பட முடியாது அல்லது பாரதீனப் படுத்தப்பட முடியாது. என்ற குணாம்சம் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதனை விட சிறீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்டன சிங்களத்தில் ஏக்கிய இராஜ்ய என்பது சரியாக குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு சரியான தமிழ் சொல் தற்போதுள்ள அரசியலமைப்பில் உள்ளதுபோல் ஏன் குறிப்பிடப்படவில்லை? என தமது கருத்தில் கூறியிருக்கின்றன.

இந்தவகையில் இடைக்கால அறிக்கைக் கு கருத்துக்களை வழங்கிய கட்சிகளை கழித்து கொண்டுவந்தால் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளே இந்த ஏக்கிய இராஜ்ய என்ற சொல்லை ஒருமித்த நாடு என இடைக்கால அறிக்கையில் இடம்பெற செய்திருக்கலாம் என சந்தேகிக்க தோன்றுகிறது. மேலும் புதிய அரசி யலமைப்பு உருவாக்கத்தில் பிரதானியான நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண இ ந்த இடைக்கால அறிக்கை தொடர்பாக கருத்து கூறும்போது 1987ம் ஆண்டு 13ம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டபோது அது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒற்றையாட்சிக்கு கொடுக்கப்பட்ட வரையறையை இது தாண்டவில்லை என கூறியுள்ளார். மேலும் முன்னாள் ஜனாதியதி மஹிந்த ராஜ பக்ஷ தலமையிலான அணி இந்த இடைக்கால அறிக்கை தொடர்பாக எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு ஊடக அமைச்சில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ண ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துக் கூறும்போது ஒற்றையாட்சியை மேலும் பலப்படுத்தியிருக்கின்றோம் என கூறியிருக்கின்றார்.

மேலும் உள்ளடக்கத்தை பார்த்தால் அரச காணிகளை மாகாணம் தேவைப்படும்போது மத்திய அரசுடன் பேசி பெ றலாம். மத்திய அரசு மறுத்தால் 3 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி அதன் முன் சென்று கேட்கலா ம். அங்கேயும் மறுக்கப்பட்டால் அரசியலமைப்பு நீதிமன்றுக்கு போகலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் தேசிய பாதுகாப்பு விடயங்களுக்காக காணியை மத்தி மாகாணத்தின் அனுமதியை பெறாமலேயே எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. தமிழ் மக்களை பொறுத்தளவில் இன்றுள்ள பிரச்சினை காணிகள் தேசிய பாதுகாப்பின் பெயரால் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் செல்வதேயாகும். மேலும் சட்டம் ஒழுங்கு, க ல்வி போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக இடைக்கால அறிக்கையில் ஒன்றும் சொல்லப்படவில்லை. மாறாக பதில் அறிக்கையில் அவற்றுக்கு துலங்கல் காட்டப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் நான் முன்னர் ஒரு தடவை கூறியதைபோன்று போண்டாவை ஒருவருக்கு போண்டா என்றும், மற்றவருக்கு வாய்ப்ப ன் எனவும் கூறி கொடுப்பதாகவே இந்த இடைக்கால அறிக்கை உள்ளது. அதற்காக இந்த இடைக்கா ல அறிக்கையை நிராகரிக்கவேண்டும் என்றில்லை. உள்ளடக்கம் வாசிக்கப்பட்டு உண்மையை மக்கள் அறியவேண்டும். மேலும் அரசியலை ஒரு சிலருடைய கைகளில் கொடுப்பதை நாங்கள் நிராகரித்து மக்கள், பல்கலைக்கழக சமூகங்கள், பொது அமைப்புக்கள் இந்த விடயத்தில் காத்திரமான பங்களிப்பை வழ ங்கவேண்டும் என்றார்.

Leave a comment