புனர்வாழ்வ பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு இன்று மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள 5 மருத்துவமனைகளிலும் முன்னாள் போராளிகள் சிகிச்சையினைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முன்னாள் போராளிகளின் உடல்நலன்கள் தொடர்பாக தமது அமைச்சு கவனம் செலுத்த தீர்மானித்துள்ளதாகவும், புனர்வாழ்வு பெற்றவர்கள் தமது உடல்நலனில் மேற்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளையும், மருத்துவக் கவனிப்பையும் வழங்குவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆலோசனைகளை பெறவிரும்புவோர் மாவட்ட வைத்தியசாலைகளிலுள்ள வரவேற்பாளரை அணுகி மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்துக்கு செல்லுமாறு அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.