விக்டர் ரத்னாயக்கவின் மனைவி தொடர்ந்தும் விளக்கமறியலில்

288 0

தங்க ஆபரண மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹஷினி அமேந்ராவை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் தங்காலை பிரதான நீதவான் மஹி விஜேவீர மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2012 முதல் 2016 ஆண்டு வரையான காலப்பகுதியில் தங்காலை பிரதேச அரச வங்கியொன்றின் அடகு பிரிவில் சேவையாற்றும் பொழுது 1,280,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் காணாமல் போனமை தொடர்பில் கடந்த 9ம் திகதி தங்காலை பகுதி மோசடி விசாரணை பிரிவினரால் ஹஷினி அமேந்ரா கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment