நாச்சிகுடா மற்றும் பேஸாலே பகுதியில் தடை செய்யப்பட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 2 டிங்கி இயந்திரங்கள், 3 வள்ளங்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக முலன்கோவில் மற்றும் பேஸாலே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.