பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான தபால் வசதிகளை அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற வருடாந்த இலவச தபால் வசதிகளை 175,000 ரூபாவிலிருந்து 350,000 ரூபா வரையிலும், மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற வருடாந்த இலவச தபால் வசதிகளை 24,000 ரூபாவிலிருந்து 48,000 ரூபா வரையிலும் அதிகரிப்பது தொடர்பில் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மூலம் குறித்த யோசனை சமர்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.