வௌிநாடு செல்ல ரோஹித்தவுக்கு அனுமதி – மஹிந்தானந்தவுக்கு?

251 0

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தனவுக்கு வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தனது வருமானத்தை மீறி சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் ரோஹித்த அபேகுணவர்த்தனவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், பெப்ரவரி 18ம் திகதி முதல் மார்ச் 3ம் திகதி வரை வௌிநாட்டில் நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள சந்தேகநபர் அனுமதி கோரியிருந்தார்.

இதனை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன, ரோஹித்த வௌிநாடு செல்ல அனுமதியளித்துள்ளார்

இதேவேளை, வௌிநாடு செல்ல அனுமதி கோரி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே முன் வைத்த கோரிக்கை, இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, விசா பெற்றுக் கொள்ள நீதிமன்றின் பொறுப்பிலுள்ள மஹிந்தனந்தவின் பாஸ்போட்டை விடுவிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.

மேலும், வௌிநாடு செல்வது தொடர்பான சந்தேகநபரின் கோரிக்கை குறித்த, சட்ட மா அதிபரது நிலைப்பாடு எதிர்வரும் 26ம் திகதி தெரியப்படுத்தப்படும் எனவும், அவர் சுட்டிக்காட்டினார்.

36 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment