கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்ட வெற்று உரப்பபைகளில் இருந்து இவ்வாறான தங்க பிஸ்கட்டுக்களை கண்டெடுத்ததாக யாழ் பிராந்திய கடற்படையின் உதவிப் பணிப்பாளர் ஆர். ஜெயந்த டி சில்வா தெரிவித்துள்ளர்.
ஒவ்வொன்றும் 100 கிராம் நிறையுடைய தங்க கட்டிகளாக 70 தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்க பவுண்கள் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கடத்தி செல்லப்படும் நிலையில், இலங்கை கடற்படையினர் நடத்திய சோதனையின் போதே இந்த தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளை யாழ். தெல்லிப்பளையில் அமைந்துள்ள இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய கடற்படையின் உதவிப் பணிப்பாளர் ஆர் ஜெயந்த டி சில்வா தெரிவித்துள்ளர்.