பிணை முறி விவகாரம்: அறிக்கை இன்று பாராளுமன்றத்தில்

224 0

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் நகல் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கரு ஜெயசூரிய அண்மையில் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவிடம் எழுத்து மூலம் தெரியப்படுத்தினார்.

இதன்படி, இன்று குறித்த அறிக்கை பாராளுமன்றத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Leave a comment