சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை உடன் நிறுத்துமாறும், சபைக்குள் இடம்பெறும் இலஞ்ச, ஊழல்களுக்கு எதிராகவும் இன்று (17) இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சபையின் தலைமையகத்தையும் மின்சக்தி அமைச்சையும் சுற்றிவளைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை கூட்டு தொழில்சங்க ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையைப் பாதுகாப்பதற்காக முகாமைத்துவ அதிகாரியுடன் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தீர்வு இன்றி காணப்படுவதாகவும் இதனாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.