உயர் நீதிமன்றத்திடம் ஏன் விளக்கம் கோரினேன்- ஜனாதிபதி அமைச்சரவையில் விளக்கம்

233 0

ஜனாதிபதி பதவிக் காலம் 5 வருடங்களா, 6 வருடங்களா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (16) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது விளக்கமளித்துள்ளார்.

தான் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியது, தொடர்ந்து 6 வருடங்களுக்கு இருப்பதற்கு அல்லவெனவும், இது தொடர்பில் இரு கருத்துக்கள் காணப்படுவதனால் ஆகும் எனவும் ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

அபிவிருத்தித் திட்டங்களை தயாரிக்கும் போதும் கூட அதிகாரிகள் தன்னிடம் இந்தக் கேள்வியை எழுப்பியதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதனால், இதற்கான சிறந்த ஒரே வழி உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவதே தான் தீர்மானித்ததனால், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment