உண்மையில் பதவி ஆசை எனக்கல்லவெனவும், தற்போதைய ஜனாதிபதிக்கே உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
5 வருடங்கள் போதாது எனக்கூறி தனது பதவிக் காலத்தை 6 வருடங்களாக அதிகரிக்க ஜனாதிபதி முயற்சித்தமை என்னை ஆச்சரியப்படுத்தியது.
பதவி ஆசை எனக்கு தான் என கூறினார்கள். எனினும், நான் இரண்டு வருடங்கள் பதவிக் காலம் மீதமிருந்தும் ஆட்சியை ஒப்படைத்து விட்டேன். ஆனால் தற்போது 5 வருடங்கள் போதாது எனக் கூறி தனது பதவிக் காலத்தை 6 வருடங்களாக அதிகரிக்க ஜனாதிபதி முயற்சித்தார். எனினும் அது சாத்தியப்படவில்லையெனவும் மலர் மொட்டு சின்னத்தில் போட்டியிடுபவர்களை ஆதரித்து கடுவலையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் கூறியுள்ளார்.