கிளிநொச்சி – வட்டக்கச்சி – பண்னங்கண்டி பாலத்தின் அடியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பலியானவர் வட்டக்கச்சி – மயவனுரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மோட்டார் சைக்கிளை அதிக வேகத்தில் செலுத்தியமையால், அது சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, பாலத்தின் கீழ் கவிழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.