சுமார் 18 வருடங்களின் பின்னர் இலங்கையின் புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நில அளவைத் திணைக்களத்தினால் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த காலப்பகுதியில் இலங்கை நிலப்பரப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதுடன், புதிய வரைப்படத்தில் இலங்கையின் துறைமுக நகரமும் உள்ளடக்கப்படவுள்ளது.
இதேவேளை இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பரப்புக்கள் அதிகரித்துள்ளதுடன், சிலாபம் கடற்கரை குறைவடைந்துள்ளதாக புதிய வரைப்படம் மூலம் விளங்குவதாக நிளஅளவையாளர் அதிகாரி உதயகாந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய வரைபடமானது செய்மதி உதவியுடன் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதன் பணிகள் நிறைவடைந்ததும் புதிய வரைபடமானது உத்தியோகப்பூர்வமாக நில அளவைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.