வாகன உதிரிப்பாக விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

256 0

மாத்தறை துடாவ பிரதேசத்தில் வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்து வந்த வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு ஏற்பட்ட குறித்த தீயினை மாத்தறை பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் மாத்தறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் குறித்த தீயின் காரணமாக வீடு மற்றும் வியாபார நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயினால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Leave a comment