நுவரெலியாவில் பனி மழை பெய்யக்கூடும் – வானிலை ஆராய்ச்சி திணைக்களம்

257 0

எதிர்வரும் தினங்களில் நுவரெலியா பிரதேசத்தில் அதிகாலை வேளைகளில் பனி மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் ஏராளமான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் இரத்தினபுரி, காலி ஆகிய மாவட்டங்களின் சில இடங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடைக்கிடையே 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளைகளில் பனி மூட்டத்துடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் வானிலை ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a comment