யாழின் இருவேறு பகுதிகளில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்

318 0

யாழில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில், இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். ஆணைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் நேற்று இரவு இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இதனால் காயமடைந்தவர்கள் கந்தையா திருநீலகண்டசிவம் (வயது 49) மற்றும் நாகமணி ஜெனிஸ்ரன் (வயது 24) எனத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Leave a comment