ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மலர் மொட்டு சின்னத்தில் மஹரகம நகர சபைக்கு போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், ஏனைய பகுதிகளிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் என்பவற்றினதும் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் எல்.ரி.பீ. தெஹிதெனிய மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதிபதிகளின் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.
இருப்பினும், நீதிபதி தெஹிதெனிய உயர் நீதிமன்ற நீதிபதியாக நேற்று (15) நியமனம் செய்யப்பட்டதனால் இந்த விசாரணை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.