குருநாகல் – குளியாப்பிட்டி தள வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படவுள்ளது.
வயம்ப பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட இருக்கும் மருத்துவ பீடத்துடன் இணைந்ததாக குளியாப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படுகிறது. இதற்கென 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.