ஹட்டன், கொட்டகல நுவரெலிய பிரதேச சபை அலுவலகத்திற்கு பின்னால் உள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியுடைய டபுள் கெப் வானம் ஒன்று திருடப்பட்டுள்ளதாக திம்புளை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (14) தைப்பொங்கல் தினம் என்பதால் அந்த அலுவலகம் மூடப்பட்டிருந்த நிலையில், அலுவலகத்தின் வௌியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த வாகனம் திருடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவரால் திம்புளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வாகனத்தின் திறப்பு அலுவலகத்தின் காவலர் அறையில் இருந்துள்ளதுடன், காவலர் அங்கு இருக்காத சமயத்தில் வேறொரு திறப்பு பயன்படுத்தப்பட்டு அந்த வாகனம் திருடிச் செல்லப்பட்டிருப்பதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கெப் வண்டியை தேடி திம்புளை பொலிஸார் விஷேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.