இதுவரையில் இலங்கையில் கண்டுடெடுக்கப்பட்ட கொகெய்ன் போதைப்பொருளை அழிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்கவின் மேற்பார்வையின் கீழ் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க உட்பட ஏனைய அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இக்கொகெய்ன் போதைப்பொருளை அழிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக கட்டுநாயக்க முதலீட்டு வலயப் பிரதேசத்தில் அவை திரவமாக மாற்றப்பட்டது.
இவ்வாறு திரவமாக்கப்பட்ட கொகெய்னை இன்று மாலை புத்தளம் சீமேந்து தொழிற்சாலையை அண்மித்த பகுதியில் அழிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.