கடுகன்னாவ பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜயவிக்கிரம காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இராஜங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜயவிக்கிரம பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த இராஜங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜயவிக்கிரம பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியில் அங்கம் வகித்த ஸ்ரீயானி விஜயவிக்கிரம கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்ட நிலையில் அவருக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.