திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா

353 0

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று புதன்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.இந்தியாவின் திருச்செந்தூர் ஆலயத்தினை நோக்கியதாக கடல் அலையின் ஆனந்தத்தில் விற்றிருக்கும் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை(23)ஆரம்பமானது.

எட்டு தினங்கள் நடைபெற்றுவந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் நேற்று பிற்பகல் ஆலயத்தில் தம்ப பூஜை நடைபெற்று முருகப்பெருமான் உள்வீதியுலா நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து தேரடிக்கு பக்தர்கள் புடை சூழ முருகப்பெருமான்கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.பூஜையினை தொடர்ந்து ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடக்கையிறை இழுத்துவர தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தேர்த்திருவிழால் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.

IMG_0004 IMG_0019 IMG_0034 IMG_0036 IMG_0056 IMG_0057 IMG_0063 IMG_0073 IMG_0076 IMG_0086 IMG_0091 IMG_0094 IMG_0095 IMG_0100 IMG_0103 IMG_0119 IMG_0123 IMG_0125 IMG_0128 IMG_0134 IMG_0136 IMG_0138 IMG_0139 IMG_0143