ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் ஆட்சி மாற்றம் வரும் என்று குருமூர்த்தி பேசியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
ரஜினியும், பா.ஜனதாவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசியுள்ளார்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:-
ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் ஆட்சி மாற்றம் வரும் என்று குருமூர்த்தி கூறுவது அவரது கருத்து. ரஜினியுடன் பா.ஜனதா கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். தமிழக மக்கள் அம்மாவின் அரசுக்குதான் ஆதரவு தருவார்கள்.
உள்ளாட்சி தேர்தல் ஆனாலும் சரி, நாடாளுமன்ற தேர்தல் ஆனாலும் சரி, 2011-ல் நடைபெறும் சட்ட மன்ற தேர்தலிலும் சரி அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். மக்கள் அம்மாவின் அரசுக்குதான் ஆதரவு தருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.