கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கற்கிளாச்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சித்தாண்டி பிரதான வீதியை அண்டி வாழும் தம்பிமுத்து கந்தசாமி (வயது 57) என்ற விவசாயியே உயிழந்துள்ளார்.
இவர் தைப்பொங்கல் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை வயல் பகுதியூடாக வரும்போது குறிக்கிட்ட காட்டு யானை இவரைத் தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.