2018 ஆம் ஆண்டில் தெற்காசியா 6.9% வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளதுடன், நுகர்வு வலுவாக இருக்கும் அதேவேளை முதலீடுகள் நல்ல நிலையில் இருக்கும் எனவும் குறித்த கணிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது.
2018 – 2019 ஆம் ஆண்டுகளில் 7.3% வளர்ச்சியை இந்தியா அடையலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன் அவ்வளர்ச்சி 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் 7.5% ஆக உயரலாம் எனவும் குறித்த கணிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் தனியார் துறையின் பொருட்கள் மற்றும் சேவைகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் தனியார் துறை முதலீட்டு வருமானத்தை அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இப்பிராந்தியத்தில் இந்தியாவை தவிர்ந்த ஏனைய நாடுகள் 2018 ஆம் ஆண்டில் 5.8% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 5.9% ஆகவும் வளர்ச்சியடையலாம் என்பதுடன், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் 5.8% ஆலும், பங்களாதேஷ் 6.7% ஆலும் வளர்சியடையும் என குறிப்பிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் வலுவான தனிப்பட்ட நுகர்வு மற்றும் முதலீட்டு வளர்ச்சியை அடையும் இலங்கை, 5% வளர்ச்சி வேகத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக குறித்த கணிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது.