மதுபான விற்பனை நிலையங்களை காலை 8.00 முதல் இரவு 10.00 மணி வரையில் திறப்பதற்கும், பெண்களுக்கு மதுபான விற்பனை மற்றும் கொள்வனவு செய்வதற்கு விதித்திருந்த தடையை நீக்குவதற்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டிருந்த சுற்றுநிருபத்தை உடன் நீக்கிக் கொள்ளுமாறு தான் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை முதல் அமைச்சர் மங்களவின் சுற்றுநிருபம் ரத்தாகும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இன்று (14) மாலை அகலவத்தையில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.